பிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்தும்
ஐம்பத்திரண்டாம் ஆண்டு பொங்கல் விழா
பேரன்புடையீர்!
வணக்கம்!!
பிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்தவிருக்கும் பொங்கல் விழாவிற்குத்
தங்களின் பாக்கள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன!
விதிமுறைகள்
- தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் அன்பர்கள் யாவரும் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
- மரபுப்பா, புதுப்பா, துளிப்பா இவ்வகைப் பாக்களை இயற்றி அனுப்பலாம்.
- மரபுப்பா 24 அடிகளும், புதுப்பா 100 சொற்களும், துளிப்பா 125 சொற்களும் இருக்க வேண்டும்.
- கட்டுரைகள் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும்.
- படைப்புகளின் தலைப்பிற்குத் தொடர்பான படங்கள் குறைந்தது ஒன்றாவது தனியாக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பெயர், ஊர், பணி உள்ளிட்ட வாழ்க்கைக் குறிப்புகளையும் மின்னஞ்சலில் குறிப்பிடவும்.
- மேற்கண்ட பா வகைகளிலும், கட்டுரைகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் கலைகள், தமிழர் விளையாட்டுகள், பொங்கல் விழா, தைத்திருநாள் தொடர்பானக் கருப்பொருளில் அமைந்திருத்தல் வேண்டும்.
- கோப்புகளில் ஒருங்குறி (unicode) எழுத்துருவில் மட்டுமே பயன்படுத்த வேண்டுகிறோம்.
- கோப்பு ‘.doc’ ‘.docx’ வகைகளில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். PDF, படங்கள், கையெழுத்துப் படிகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : editor@francetamilsangam.fr
(அல்லது)
கீழ்க்காணும் படிவம் வாயிலாகத் தங்கள் குறிப்புகளைக் குறிப்பிட்டுக் கோப்பினைப் பதிவேற்றம் செய்யலாம். - படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15 பிப்ரவரி 2022.
- ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் வலைதளத்தில் பதியப்படும்.
தொடர்புக்கு : +33 7 52 17 35 36
நன்றி!
விழாக் குழு,
பிரான்சு தமிழ்ச் சங்கம்,
பிரான்சு.
01-02-2022